என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர் கொலை"
- இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர்.
- வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பளிப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் வாசுதேவன் (வயது19). மேலூர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் கோட்டைப்பட்டி விலக்கு அருகே தனது நண்பர் பாலகண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பூதமங்கலம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருந்த வந்த முன்விரோதத்தில் வாசுதேவன் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக மேலூரை சேர்ந்த பிரேம்குமார்(25), வீரா(19), தனுஷ்(20), சுதர்சன்(20), சரவணபுகழ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
- மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
- உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார். நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். சில மாணவர்கள் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவனை, ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மவுலீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் பள்ளி முன்புள்ள திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு 3 மாணவர்களையும் இன்று கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திரபிரசாத் (வயது 18). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இன்று காலை ஜக்கம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் நாகேந்திரபிரசாத் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் உடலை போலீசார் கைப்பற்றி ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் சென்ற நண்பர்கள் எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. எனவே இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 16).
இவர் நாமக்கல் கோட்டை அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடந்த பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மணிகண்டன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனைஉறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் மணிகண்டனை தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை.
தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் மணிகண்டன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதனால் சோகத்தில் மூழ்கிய ராஜ்குமார்- செந்தாமரை மற்றும் உறவினர்கள், மணிகண்டனின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.
அதில், அவரது பெயர் மற்றும் முகவரி, செல்போன் எண், புகைப்படத்தை அனைவருக்கும் பகிரவும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மாயமான மணிகண்டன் இன்று காலை பிணமாக மிதந்தார்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், மணிகண்டன் பிணமாக கிடந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த கிணற்றை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குளிக்க சென்றாரா? அப்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் சரவணன்.
சாய்ராம் கல்லூரியில் இவர் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற மாணவர் சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி மறுநாள் அவரது தாய் சங்கரி ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆனால் சரவணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் சரவணனின் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் கல்குவாரியில் வாலிபர் ஒருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இது காஞ்சிபுரம் மாவட்ட காயார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியாகும். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் ஆதம்பாக்கத்தில் மாயமான மாணவர் சரவணன் உடல் என்பது தெரிய வந்தது. சரவணனின் தலையில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சரவணனை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று கடத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் பெரிய கல்லை கட்டி உடலை குவாரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரவணனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.
சரவணனுக்கு நண்பர்கள் அதிகம். வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர் எங்கு சென்றார்? கொலையாளிகளிடம் சிக்கியது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. கடந்த 22-ந்தேதி காணாமல்போன அன்று சரவணன் கடைசியாக யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காதல் தகராறில் கொலை நடந்ததா? நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது இதுதொடர்பாக சரவணன் படித்துவந்த என்ஜினீயரிங் கல்லூரியில் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கும்போது, கொலையாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதன்மூலம் கூலிப்படையினர் சரவணனை கடத்திச் சென்று கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவர் சரவணனின் உடலை மீட்ட காயர் போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மாயமாகி 7 நாட்களுக்கு பின்னர் சரவணன் உடல் மீட்கப்பட்டதால் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. அவரது போட்டோ மற்றும் பெற்றோர் கூறிய அடையாளத்தை வைத்தே சரவணனின் உடல் அடையாளம் காணப்பட்டது.
கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஒரே வளாகத்தில் இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகள் உள்ளன.
இதில் என்ஜினீயரிங் கல்லூரி தன்னாட்சி நிர்வாகம் பெற்றது. மற்றொரு கல்லூரி அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டது ஆகும். இந்த கல்லூரிகளில் தங்கள் கல்லூரி தான் சிறந்தது என்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
விடுமுறை நாளான நேற்று விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் கேன்டீனுக்கு சாப்பிட சென்றனர். அப்போது மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் திருச்சி குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த ஆரிப் அகமது கான் என்பவரின் மகன் அஸ்ரப் முகமது (18) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கதறினர். உடனே விடுதி மாணவர்கள் அங்கு திரண்டனர்.
கல்லூரியில் படிக்கும் தவுபிக் என்பவர் நேற்று தினகரனின் நண்பரிடம் கல்லூரியில் தினகரன் தான் பெரிய ஆளாமே, அவரை எல்லோரும் தீனா என்று தான் அழைப்பார்களாமே என கிண்டலாக கேட்டதோடு, தினகரனின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புமாறு கூறி உள்ளார்.
இதையறிந்த தினகரன் தனது நண்பர்களுடன் சென்று தவுபிக்கிடம் கேட்ட போது தான் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அஸ்ரப் அகமது, தினகரனிடம் உன்னை பற்றி புகார் செய்து கல்லூரியை விட்டே நீக்க வைக்கிறேன் பார் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன் கத்தியால் குத்தியதில் அஸ்ரப் முகமது இறந்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இவர்கள் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் கைதான மாணவர்கள் தரப்பை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவரும் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். #Coimbatore #CollegeStudent
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்